Friday, 8 November 2013

வழுக்கை தலையாவதை தடுக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

வழுக்கை தலையாவதை தடுக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

தேங்காய் பால்

தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.. எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.

கற்றாழை

முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்காப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

வேப்பிலை

வேப்பிலை அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு, முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இநத் முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு, வேப்பிலை பேஸ்டுடன், தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து தேய்க்கலாம்

முட்டை

முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3-4 முறை மேற்கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உத்து பௌலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்தமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.

வெந்தயம்

2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணிநேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

அவகேடோ & வாழைப்பழம்

அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

ஆரஞ்சு

ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

மருதாணி இலை

நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலையை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

ஆளி விதை

 2-3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, நீரில் போட்டு 5 நாட்கள் ஊற வைத்து, அந்த நீரை காட்டனில் நனைத்து, ஸ்கால்ப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, ஸ்கால்ப்பில் தடவி, 3-4 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். வேண்டுமெனில் இந்த முறையை இரவில் படுக்கும் போது செய்து, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு சுற்றிக் கொண்டு தூங்கி, காலையில் குளிக்கலாம்.

ஜிஜோபா ஆயில்

 இந்த எண்ணெய் வலிமையான மற்றும் மென்மையான முடியின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் இந்த எண்ணெய் முடியின் வறட்சியையும் தடுக்கும். அதற்கு இந்த எண்ணெயை கொண்டும் முடிக்கு மசாஜ் செய்து குளிக்கலாம்.

மயோனைஸ்

பாதிக்கப்பட்டுள்ள முடியைப் சரிசெய்ய, மயோனைஸை முடியில் தடவி, ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு தலையை சுற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

தேன்

தேன் முடிக்கு ஆரோக்கியத்தையும், மினுமினுப்பையும் தரக்கூடியது. எனவே தேனை, ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, முடிக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை

நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு, செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை அரைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கலந்து, இரவில் தூங்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் பொடியை, பூந்திக்கொட்டை, சீகைக்காய் பொடியுடன் சேர்த்து, தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்து கலந்து, முடிக்கு தடவினால், முடி ஆரோக்கியமாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.

தயிர்

ஸ்காப்பில் உள்ள பொடுகைப் போக்குவதற்கு, 2 டீஸ்பூன் மிளகுத் தூளை தயிரில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, வறட்சியும் நீங்கும்.

வினிகர்

வினிகரில் பொடுகை நீக்கும் பொட்டாசியம் மற்றும் நொதிகள் உள்ளன. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை ஸ்கால்ப்பில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால், தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பொடுகு நீங்கி, மயிர்கால்களை நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவும் பொடுகை நீக்கும் தன்மையுடையது. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சேடாவை, ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, முடி உதிர்தல் தடைபடும்.

Read more at: 
http://tamil.boldsky.com/beauty/hair-care/2013/20-home-remedies-hair-care-men-003354.html#slide196101




                              
                                                       Thanks & Regards
                                                               ...yuvi...
                                                         +91-9715694151
                                                     yuvi60mech.blogspot.com                                                                                                                        ~~~~


No comments:

Post a Comment

thank....